• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கேன் மூலம் பெட்ரோல் திருடும் இளைஞர்கள்!!

BySubeshchandrabose

Aug 22, 2025

தேனி அருகே பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்கள் சுற்றி திரிந்துள்ளனர்.

அப்போது அந்த தெருக்களில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து பாட்டில் மூலம் பெட்ரோலை திருட முயற்சித்துள்ளனர் ஆனால் அதிலிருந்து பெட்ரோல் எடுக்க முடியாததால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் கேன் மூலம் பெட்ரோலை திருடி செல்கின்றனர்.

இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை திருடும் காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இப்பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் இது போன்று பெட்ரோல் திருட்டு சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், திருட்டில் ஈடுபடும் இளைஞர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.