மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கற்குவேல் அய்யனார் கோவில், குப்பணம்பட்டி கருப்பு கோவில், மள்ளப்புரம் சுகந்தவன பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கடந்த இரு மாதங்களில் அடுத்தடுத்து உண்டியலை உடைத்து கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வந்தனர்.,

இந்த சம்பவங்கள் தொடர்பாக உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்., இதில் ஆரியபட்டியைச் சேர்ந்த அஜய், ஸ்ரீநாத் என்ற இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்திய போது கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.,
மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட உண்டியல், 5000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
போதை பழக்கத்திற்கு அடிமையாகிய நண்பர்கள், ஆடம்பர வாழ்க்கை மற்றும் போதை பொருள் வாங்க இது போன்ற திருட்டு சம்பவங்களை இளைஞர்கள் அரங்கேற்றி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.,