• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இபிஎஸை துரோகியுடன் பயணம் செய்கிறோம் என திட்டிய வாலிபர்- போலீசார் விசாரணை

ByKalamegam Viswanathan

Mar 11, 2023

முன்னாள் முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தபோது துரோகியுடன் பயணம் செய்கிறோம் திட்டிய வாலிபரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை வந்தடைந்தார் அவரை மதுரை மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு உதயகுமார் எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா பெரிய புள்ளான் ஆகியோர் வரவேற்பு அளித்தனர் இந்நிலையில் இளைஞர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.முதல் கட்ட விசாரனையில் சிங்கபூரிலிருந்து சென்னை வழியாக. மதுரை வந்த சிங்கம்புணரி M.வையாபுரிபட்டி கிராமத்தை சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன் (வயது 42) என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார்.பின்னர் விமானத்தில் வந்தவர்கள் பேருந்தில் வந்தபோது செல்போனில் வீடியோ எடுத்து துரோகியுடன் பயணம் செய்கிறோம் சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர். 10.5 இடஒதுக்கிடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் என கூறி பேஸ்புக் வில் பதிவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பாதுகாவலர், மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் ராஜேஸ்வரன் செல்போனை பறித்து விசாரணைக்காக போலீஸாரிடம் ஒப்பத்தனர்.
இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.