• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

புதிய அனுபவம் கிடைக்கும் என்று போதைப் பழக்கத்திற்கு செல்லும் இளைஞர்கள் மூச்சுப் பயிற்சி மூலமாக கொடுக்கலாம் – வாழும் கலை அமைப்பு தலைவர் ஶ்ரீரவிசங்கர் பேட்டி…

ByKalamegam Viswanathan

Dec 16, 2023

மன நிம்மதி இல்லாத காரணத்தால் தான் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு செல்கிறார்கள். புதிய அனுபவம் கிடைக்கும் என்று தான் போதைப் பழக்கத்திற்கு செல்கிறார்கள். அந்த அனுபவத்தை மூச்சுப் பயிற்சி மூலமாக கொடுக்கலாம். அதனால் செலவும் இல்லாமல் உடலும், வாழ்க்கையும் நல்லதாக இருக்கும். இதனால் பல கோடி மக்கள் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து வெளியே வந்துள்ளார்கள் – வாழும் கலை அமைப்பு தலைவர் ஶ்ரீரவிசங்கர் பேட்டி…

வாழும் கலை அமைப்பு சார்பாக மதுரையில் இன்று மகா சத்சங்கம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்காக மதுரை வந்த வாழும் கலை அமைப்பின் தலைவர் ஶ்ரீ ரவிசங்கர் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின்னர் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது..,

தமிழ்நாட்டில் 85 நதிகள் இருந்தது அவையெல்லாம் தற்போது வற்றி விட்டது. அதனால் தான் காவேரி போன்ற தண்ணீர் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

நதிநீர் இணைப்பு திட்டத்தில் வாழும் கலை அமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது. இன்று மதுரையில் வைகை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் பங்கேற்க உள்ளோம் .

மன நிம்மதி மிகவும் முக்கியமானது. செல்வம் இருந்தாலும் மன நிம்மதி இல்லாமல் பலர் இருந்து வருகின்றனர், அவர்களுக்கு என்று ஒரு பயிற்சி கொடுத்து நல்ல சூழலை மாற்றுகிறோம்.

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பிற்கு வாழும் கலை உதவியதா என்ற கேள்விக்கு

சென்னையில் நடந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் களத்தில் இறங்கியது வாழும் கலை தன்னார்வலர்கள் தான். என்னிடம் அதற்கு ரிப்போர்ட் உள்ளது. 150 தன்னார்வலர்கள் மழை தண்ணீரில் இறங்கி பலருக்கு உதவியுள்ளனர்.

நாக நதியிலும் இறங்கி பணிகள் மேற்கொண்டுள்ளோம் அதை பிரதமர் கூட சொல்லி உள்ளார்,

வேலூர் மாவட்டத்தில் நதியில் 365 நாளும் தண்ணீர் செல்கிறது அதுபோல வைகையிலும் இறங்கி வேலை செய்ய உள்ளோம்.

இன்றைய இளைஞர்களுக்கு உடல் ரீதியான அக்கறை குறித்த கேள்விக்கு,

அதற்காகத்தான் பல இடங்களில் யோகா, தியானம் சொல்லிக் கொடுக்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் ஜாதி மதம் போன்ற சண்டை சச்சரவு இல்லாமல் அனைவரும் ஒரு குடும்பம் என்கிற எண்ணத்தோடு வாழ வேண்டும். ஏற்றத்தாழ்வு இல்லாமல் மனித நன்மைக்காக அனைவரும் இருக்க வேண்டும் அதற்காகத்தான் செய்கிறோம்.

இலங்கை சென்று அங்கு இருக்கும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்களுக்கு நிலம், வீடு போன்றவை கொடுத்து பார்த்துக் கொள்கிறோம் என அந்த வட கிழக்கு மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். தை மாதத்திற்கு பிறகு மீண்டும் அங்கு செல்ல உள்ளோம்.

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகுவது குறித்த கேள்விக்கு,

மன நிம்மதி இல்லாத காரணத்தால் தான் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு செல்கிறார்கள். புதிய அனுபவம் கிடைக்கும் என்று தான் போதைப் பழக்கத்திற்கு செல்கிறார்கள் அந்த அனுபவத்தை மூச்சுப் பயிற்சி மூலமாக கொடுக்கலாம். அதனால் செலவும் இல்லாமல் உடலும், வாழ்க்கையும் நல்லதாக இருக்கும். இதனால் பல கோடி மக்கள் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து வெளியே வந்துள்ளார்கள்.