• Fri. May 3rd, 2024

புதுக்குளம் கிராமத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள்.., பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியல்…

ByKalamegam Viswanathan

Dec 16, 2023

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் புதுக்குளம் கிராமத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியல் செய்தனர். பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் புதுக்குளம் கம்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா புதுக்குளம் பிட் 1ல் சுமார் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 300 பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் பவுன்ராஜ் வயது 60 என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புதுக்குளம் கம்மாயில் கடந்த 50 வருடங்களாக வசித்து வருவதாகவும், தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி உதவிட வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பொதுப்பணித்துறையினரிடம் ஆய்வு செய்து அறிக்கை கேட்டது .

அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்ததில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 300 பேர் வசிக்கின்றனர். இவர்கள் நீர் பிடிப்பு பகுதியில் வசித்து வருவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து புதுக்குளம் கண்மாயில் வசிக்கும் பொது மக்களுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று பொதுப்பணித்துறை எஸ். டி. ஓ. அன்பரசன், மதுரை மேற்கு வட்டாட்சியர் மீனாட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், மின்துறை ஊழியர்கள், நாமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார், சமயநல்லூர் காவல் ஆய்வாளர் ராதா மகேஷ் மற்றும் 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகாரிகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர்.

பொதுமக்கள் அதிகாரியிடம் அதிகாரிகளிடம் முற்றுகை போராட்டம் நடத்துவது குறித்து தகவல் அறிந்து வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அன்பரசு மற்றும் வருவாய்த்துறை தாசில்தார் மீனாட்சி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாங்கள் நடப்பதாகவும் அதில் வரும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 20 குடும்பத்தினருக்கு மட்டும் பட்டா வழங்குவதாகவும், மீதமுள்ளவர்கள் பொருளாதார ரீதியில் முன்னுரிமை பெற்றதால் இடம் வழங்க முடியாது என கூறினர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிகாரியிடம் தொடர்ந்து பேசியதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் அதிகாரிகள் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறினர். புதுக்குளம் கிராம மக்கள் குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் அளித்தால் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக் கொள்வதாக கூறினர்.

ஆனால் .அதிகாரிகள் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு மீறி எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் எங்கள் மீது உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனக் கூறினர். இதனை அடுத்து போலீசார் துணையுடன் புதுக்குளம் கண்மாய் பகுதியில் ஆக்கிரமிக்கும் பெற்றுள்ள வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர். வந்த அதிகாரிகளிடம் தகராறு செய்ததாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தாலுகா குழு உறுப்பினர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *