தமிழகம் மட்டும் அல்ல கேரளாவிலும் தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளது மட்டும் அல்ல. குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களிலும், சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படுகிறார்கள்.
கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்த மலையின் கீழ் பகுதியை சேர்ந்த 6_ இளைஞர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட.

குமரி மாவட்டத்தில் உள்ள பல அணைகளில் ஒன்றான சிற்றாறு அணை பகுதிக்கு வந்த அந்த இளைஞர்கள் சிற்றாறு அணையில் இரங்கி நீராடினார்கள். உற்சாகமாக குளியல் துள்ளாட்டம் போட்ட இளைஞர்கள் கூட்டத்தில் ஒருவரான அவினாஷ்(27) அணையின் ஆழாமான பகுதிக்கு சென்றுவிட்ட நிலையில். நீரில் மூழ்குவதை உணர்ந்த அபினாஷ் அபல குரலாக காப்பாற்றுங்கள்,காப்பாற்றுங்கள் என சத்தம் எழுப்ப உடன் இருந்த இளைஞர்களாலும்,அவர்களுடன் வந்த நண்பனை காப்பாற்ற முடியாது பரிதவித்தனர். கண் எதிரே உடன் வந்த நண்பன் நீரீல் மூழ்குவதை கண்டனர்.
குமரி ஆறுகாணி காவல்துறையினர் அபினாஷ் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காக, குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிற்றாறு அணைப்பகுதியில் அடிக்கடி இத்தகைய விபத்து நடப்பது ஒரு தொடர்கதையாக தொடர்வதாக அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சுற்றுலா காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளது போல். சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும், குமரியில் உள்ள அனைத்து அணைப் பகுதிகளிலும் சுற்றுலா காவலர்களை பணி அமர்த்தினால்,இத்தகைய மரணங்களை தடுக்கலாம் என்பதே அந்த பகுதியில் உள்ள பொது நல ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.