• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இளைஞர் மாரடைப்பால் மரணம்…

ByKalamegam Viswanathan

Jun 22, 2023

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்துள்ள குமார பகுதியைச் சேர்ந்த ஜான்சன் பிரபு (வயது 33). இவர் தனியார் டிராவல்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை மதுரை பைபாஸ் சாலை வழியாக வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் ஓட்டி வந்த வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுனர் இருக்கையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இறக்கும் தருவாயில் கூட விபத்து ஏற்படாத வண்ணம் சாலை ஓரமாக வேனை நிறுத்தி இயற்கை எய்தினார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் இருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழு அவரை சோதித்த போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. உடனே எஸ். எஸ். காலனி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.