மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பண்ணப்பட்டி விலக்கு அருகே தேனி மாவட்டம் உப்புக்கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து என்ற இளைஞர் வரும் 22 ஆம் தேதி தனது இல்ல விழாவிற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த ஸ்ரீசரண் என்ற இளைஞரை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை கிராமத்தில் உறவினருக்கு அழைப்பிதழ் வைப்பதற்கு சென்று உள்ளனர்.,

இந்நிலையில் உசிலம்பட்டி அருகே பண்ணப்பட்டி விலக்கு அருகே சென்றபோது முன்னாடி சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி நடுரோட்டில் விழுந்ததில் ராஜபாளையத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து மாரிமுத்து தலை மீது ஏறியதில் சம்பவ இடத்தில் பலி.
உடன் சென்ற ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஸ்ரீசரண் காயமடைந்த நிலையில் 108 வாகனம் மூலம் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவமறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,
இரு இளைஞர்களும் தேனில் உள்ள பூக்கடையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இல்ல விழாவிற்கு அழைப்பிதழ் வைக்கச் சென்ற இளைஞர் மீது பேருந்து மோதி சம்பவ இடத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



