திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமன் இவரது மகன் ரபீக் ராஜா (வயது 22) நேற்று திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நின்ற போது, அனுப்பானடியில் இருந்து மகாலட்சுமி காலனிக்கு செல்லும் 32 A அரசுப்பேருந்து திருப்பரங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே சாலையில் கிடந்த தண்ணீர் பாட்டிலில் பஸ் சக்கரம் ஏறிய போது, அதிலிருந்து தண்ணீர் ரபீக் ராஜா மேல் தெரித்தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரபிக் ராஜா கல் எடுத்து அரசு பேருந்தை தாக்கியதில் படிக்கட்டில் இருந்த கண்ணாடி முற்றிலும் சேதமடைந்தது இது குறித்து அரசு பேருந்து நடத்துநர் அதியமான் (வயது 42)அளித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரபீக் ராஜா கைது செய்யப்பட்டார்.