• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இளம் பெண் தொழிலதிபர்கள் ஆட்டோ பேரணி

ByPrabhu Sekar

Mar 8, 2025

இங்கிலாந்தை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர்கள் சென்னை முதல் கோவா வரை ஆயிரம் கி.மீ தூரத்திற்கு ஆட்டோ பேரணி நடத்தினர்,

மகளிர், சிறுவர் நல நிதி சேகரிக்க 18 ஆட்டோக்களில் 54 பேர் பேரணி நடத்தியதாக பேட்டி அளித்துள்ளனர்,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தகள் நல நிதி திரட்டும் விதமாக யூ.கே வை சேர்ந்த 54 இளம் பெண் தொழிலதிபர்கள் , 18 ஆட்டோக்களில் சென்னை தாம்பரத்தில் இருந்து கோவா வரை 1000 கி.மீ தூரத்தை 6 நாட்களில் பேரணியாக புறப்பட்டனர்,

இதற்கான ஏற்படுகளை மெட்ராஸ் மிட்டவுன் ரவுண்டு டேபிள்-42 மற்றும் லேடிஸ் சர்கிள்-7 ஆகிய அமைப்புகள் மேற்கொண்டன.

பேரணியாக செல்ல தி சிஸ்டர் ஹூட் அமைப்பை சேர்ந்த யூ.கே வை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர்களின் பாதுகாப்பு மற்றும் ஆட்டோ ஓட்டிச்செல்ல அனுமதியும் பெற்று இந்த பேரணியில் சென்றுள்ளனர்,

இதேபோன்று பல நிகழ்ச்சிகளை நடத்தி இதுவரை 80 லட்சம் நிதி திரட்டி உள்ள நிலையில் இந்த பேரணி மூலம் ஒன்று முதல் மகளிர் நலன் மற்றும் சிறுவர்களுக்காக 3 கோடிக்கு நிதி திரட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.