• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது !

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் .கூலித்தொழிலாளியான இவர் காவிரி புதுபாளையம் பகுதியை சேர்ந்த 16வயது சிறுமியை கடந்த 25ம் தேதி காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார்

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் சிறுமியை காணவில்லை என்று பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில்,

போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆனந்த்ராஜ் கட்டாய திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்தது விசாரனையில் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து மகிளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.