• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நீங்கள் ஆன்மீகத்தை அரசியலால் பார்க்கிறீர்கள் நாங்கள் ஆன்மீகத்தை ஆன்மீகமாக பார்க்கிறோம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

ByG.Suresh

Mar 5, 2024

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரதமர் மோடி நீங்கள் ஆன்மீகத்தை அரசியலாக பார்க்கிறீர்கள் நாங்கள் ஆன்மீகத்தை ஆன்மீகமாக பார்க்கிறோம் என பேசினார்.

சிவகங்கை அரன்மனைவாசல் முன்புள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் நகர் திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகன் ஸ்டானினின் பிறந்த நாள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொது கூட்டம் நகர செயலாளர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வட நாட்டை சார்ந்தவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் உண்டு வட நாட்டிலிருந்து வந்தவர்கள் எல்லாம் பின் வாங்கியவர்கள். ஆனால் வட நாட்டவர்கள் நம்மை இருட்டடிப்பு செய்து ஜான்சிராணியை பெரிதாக்குகிறார்கள். ஆனால் நம்முடைய வேலுநாச்சியார் 8 ஆண்டுகள் மறைந்திருந்து மீண்டும் ஆட்சியை மீட்டவர். அப்பேற்பட்ட மண் நம்முடைய தமிழகம். தொடர்ந்து இரண்டு நாட்களாக இப்பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறேன். அன்னை குயிலிக்கும் நம்முடைய வேலுநாச்சியாருக்கும் உள்ள தொடர்பை நான் சொல்ல தேவையில்லை. இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பின் நாம் என்னென்ன செய்தோம். என விளக்கவே இந்த கூட்டம். கடந்த 10 ஆண்டுகளில் நம்மை எவ்வாறு வஞ்சித்து வருகிறார்கள் என தெரியும் 2014 ஆம் ஆண்டு பெட்ரோல், கேஸ் விலை அதிகமாகிருக்கிறது. நம்முடைய திமுக அரசு வந்த பிறகு சுமார் என்னூறு ரூபாய் வரை சேமிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு வளர்ச்சியை கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி. நீங்கள் நலமா என்கிற திட்டத்தை துவங்க இருக்கிறோம். அரசு அலுவலர்கள் உங்களை தேடி வரவுள்ளனர். இதேபோல் ஒவ்வொரு நாளும் புது புது திட்டஙகளை வழஙகிவருகின்றனர். ஆனால் மோடி 8 முறை இங்கு வந்து சென்றிருக்கிறார். ஆனால் அவர் பேசுவதெல்லாம். திமுகவை ஒழிப்பேன் என திமுகவை ஒழிப்பேன் என பேசியவர்கள் எல்லாம் ஒழிந்துவிட்டனர். அழிப்பேன் என கூறியவர்கள் எல்லாம் அழிந்துவிட்டனர். அவர் கடந்த 10 ஆண்டுகளாக வருமையை ஒழிப்பேன் என கூறி வருகின்றனர். ஆனாலவர் ஒழிக்கவில்லை. ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லுகிற ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்று வருகிறார். பெண் பிள்ளைகளை படிக்க வையுங்கள். பிள்ளைகளுக்கு சொத்து சுகம் சேர்க்க வேண்டியதில்லை. படிக்க வைத்தால் போதும். ஒரு லட்சத்தி 88 ஆயிரம் கோடியை பள்ளிக்கல்வித்துறைக்கென ஒதுக்கியிருக்கிறார் நமது முதல்வர். பெண்கள் என வரும்போது ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கிவருகிறார். இப்படி பெண்களை நாங்கள் உயர்த்தி வருகிறோம் ஆனால் பா.ஜ.க ஆளும் மனிப்பூரில் என்ன நடந்தது. பெண்கள் எவ்வாறு அவமானப்படுத்தப்படுகிறார்கள் என பாருங்கள். பெண் பிள்ளைகளுக்கு மட்டுமா ஆண் பிள்ளைகளுக்கு இல்லையா என கேட்காதீர்கள் அவர்களுக்கு திட்டஙகளை செய்து வருகிறார் நமது முதலமைச்சர். மோடி அவர்களுக்கு நான் கூறிக்கொள்வது நீங்கள் ஆண்மிகத்தை அரசியலாக பார்க்கிறீர்கள், நாங்கள் ஆன்மிகத்தை ஆன்மிகமாக பார்க்கிறோம். நீங்கள் இட ஒதுக்கீட்டை சலுகையாக பார்க்கிறீர்கள் நாங்கள் சமூக் நீதியாக பார்க்கிறோம் நீங்கள் தமிழ் மொழியை ஒரு மொழியாக பார்க்கிறீர்கள் நாங்கள் உயிராக பார்க்கிறோம் என்றும் காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் உணவருந்தாமல் செல்கின்றனர் என்கிற உங்களின் வேதனையை நன்கு அறிந்ததால்தான் காலை உணவு திட்டத்தை வழஙகினார். வெள்ளம் வந்தபோது வராத மோடி, நீட் தேர்தலினால் 22 குழ்ந்தைகள் இறந்தபோது வராத மோடி, தமிழக மக்கள் போராடும்போது வராத மோடி, தமிழக உரிமைகளுக்காக போராடும்போது வராத மோடி தற்சமயம் அடிக்கடி வருகிறார் என்றால் தேர்தல் வருகிறது என்பதற்காக மட்டுமே. என பேசினார். இந்த கூட்டத்திற்கு ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.