மதுரையில் விருக்சா உலக சாதனை புத்தகம் சார்பில் யோகா மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை கருப்பாயூரணி காளிகாப்பான் பகுதியில் அமைந்துள்ள அக்குனு சுந்தர் பள்ளி வளாகத்தில் விருக்சா உலக சாதனை புத்தகம் சார்பில் யோகா மற்றும் பரதநாட்டியம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. யோகாசனத்தில் 140 மாணவர்கள் சர்வாங்காசனம் 10 நிமிடம் செய்து சாதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து பரதநாட்டியத்தில் 60 மாணவர்கள் பத்து நிமிடத்தில் 10 வகையான முகபாவனை நடனங்களை செய்து சாதனை படைத்தனர். சாதனைக்குரிய அங்கீகார சான்றிதழை விருக்சா உலக சாதனை புத்தகத்தின் நடுவர் ரெங்கநாயகி மற்றும் பள்ளியின் தாளாளர் முதல்வர் ஆகியோர் யோகா ஆசான் கலையரசி பரதநாட்டிய ஆசிரியர் ராஜமீனாட்சி ஆகியோருக்கு வழங்கினர். இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன், யோகா வெல்னஸ் டிரஸ்ட், கலாபவன் கல்ச்சுரல் அகாடமி, மற்றும் ஆத்மா யோகாலயா ஒருங்கிணைந்து செய்து இருந்தனர். இவ்விழாவில் பெற்றோர்கள் பொதுமக்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கை தட்டி உற்சாகப்படுத்தினர்.