சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நடுவீரப்பட்டில், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சலீம் கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் இம்தியாஸ் அகமது முன்னிலை வகித்தார். செயலாளர் சதாம் உசேன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுசெயலாளரும், தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப் கலந்து கொண்டு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மேலும் குன்றத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் இ.மணி, நடுவீரப்பட்டு தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் மேனகாதேவி கோமகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில துணை பொதுசெயலாளர் தாம்பரம் யாக்கூப், அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரானுடன் யுத்தத்தில் ஈடுபடுவதால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், இந்தியா ஒரு மாதத்திற்கு மட்டுமே எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்கா கூறியிருப்பது ஆணவமான கருத்து என்றும், இது எஜமானி போக்கை காட்டுவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

அதேபோல் அலி கேமணி படுகொலை குறித்து கார்த்திக் சிதம்பரம் கூறிய கருத்தையும் வன்மையாக கண்டித்த அவர், அந்த பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவும் இந்திய மக்களும் ஈரான் பக்கம் இருப்பதாகவும், பிரதமர் மோடி வேண்டுமானால் இஸ்ரேல் பக்கம் இருக்கட்டும் என்றும் தாம்பரம் யாக்கூப் கூறினார்.



