மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கச் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி அங்குள்ள ஜகதம்பா மாதா கோவிலில் முரசு கொட்டி வழிபாடு செய்தார்.
வாஷிம், மும்பை மற்றும் தானேயில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர் மோடி மஹாராஷ்டிரா சென்றடைந்தார். அப்போது வாஷிமின் போஹராதேவியில் உள்ள ஜகதம்பா மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபட்டார். பின்னர் முரசு கொட்டி உற்சாகம் அடைந்த பிரதமர் மோடி, பஞ்சாரா இன மக்களின் பாரம்பரிய நடனத்தையும் கண்டு ரசித்தார்.
இதனை தொடர்ந்து சந்த் செவலால் மகாராஜ் மற்றும் சந்த் ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் சமாதிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு வாஷிமில் பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அதில் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் – ஆரே இடையேயான மெட்ரோ ரயில் சேவையும் அடங்கும்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜகதம்பா மாதா கோவிலில் பிரதமர் மோடி முரசு கொட்டி வழிபாடு








