• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை இன்று திறப்பு!!

ByA.Tamilselvan

Oct 29, 2022

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், ‘விஸ்வஸ்ரூபம்’ என்று அழைக்கப்படும் பிரமாண்ட சிவன் சிலை இன்று திறக்கப்படுகிறது.
உதயப்பூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில், குன்றின் மீது இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. தியானநிலை தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவன் சிலையை 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்துகூட பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இரவிலும் இந்தச் சிலையை காணக்கூடிய வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிலைக்குள் அமைக்கப்பட்டுள்ள 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகள் மூலம் பக்தர்கள் உள்ளே சென்று பார்க்கலாம். இங்கு ஒரு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3 ஆயிரம் டன் உருக்கு மற்றும் இரும்பு, கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 250 ஆண்டுகள் நீடிக்கும் வகையிலும், 250 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் வகையிலும் இந்த சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் சிவன் சிலையை திறந்துவைக்கிறார். சிலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பொழுதை கழிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.