• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் உலக சாதனையாக 24 மணி நேரம் பரதநாட்டிய நிகழ்ச்சி

Byகுமார்

Feb 19, 2023

மதுரையில் மகா சிவராத்திரி முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சியாக 24 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டிய நாட்டிய அஞ்சலி நடைபெற்றது.
மதுரையில் ஸ்ரீகலாகேந்திராமற்றும் தமிழ் இசை சங்கம் சார்பில் ஏழாம் ஆண்டு மகா சிவராத்திரி முன்னிட்டு நாட்டியாஞசலி ராஜா முத்தையா மன்றத்தில்நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கர்நாடகா கேரளா ஆந்திரா உள்பட இந்தியா முழுவதும் இருந்து 425 சிறந்த கலைஞர்களால் 24 மணி நேரம் தொடர்ந்து ஆடப்படும் நடன சங்கமம் மற்றும் உலக சாதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஸ்பாட்லைட் உலக சாதனை நிறுவனம் மற்றும் ஹைரேஞ் உலக சாதனை நிறுவனமும் முன்னிலையில் நாட்டியாஞ்சலி நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் உலக சாதனை படைத்த ஸ்ரீஅம்சினிமகாதேவன் சாதனையை அங்கீகரித்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.இந்த பரிசு விழாவிற்கு தமிழ் இசை சங்கம் மூத்த அரங்காவலர் குழு தலைவர் மோகன்காந்தி தலைமையிலும் கிருஷ்ணன்,பழனியப்பன். அருண்லால்,பிரமிளாகிருஷ்ணன், கவிஞர் ரவி, குமாரிலட்சுமிஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினர் இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்பாட்லைட் உலக சாதனை ceo மகாதேவன் செய்திருந்தார்இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சீதா ராமர் கல்யாணம் பரதநாட்டியம் தத்துவரூபமாக நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.