• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

உலக சுகாதார உச்சி மாநாடு..,

ByR.Arunprasanth

Apr 28, 2025

முதல் வகை நீரிழிவை பராமரிக்க தீர்வுகளைத் தேடி இத்துறையில் உள்ள உலகளாவிய தலைவர்கள், இன்சுலின் கம்பெனிகள், குறைபாட்டுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உள்ள அமைப்புகள், மற்றும் பல்வேறு மருத்துவர்கள் பங்கு பெற்றனர்.

நான் அவர்களிடத்தில் என்னுடைய கதையை சொல்லிவிட்டு, என்னைப் போன்று ஆயிரக்கணக்கான மக்கள் இக்குறைபாட்டுடன் வாழ்ந்து கொண்டிருப்பதையும், அதில் பெரும்பாலானோர் சிறுவயது குழந்தைகள் எனவும் அவர்களது மருத்துவ பராமரிப்பு செலவு மிக அதிகமாக உள்ளது என்பதையும் எடுத்து கூறினேன்.

இனி வருங்காலத்தில் அரசாங்கம் இக்குறைபாட்டுடன் வாழும் குழந்தைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த அவர்களின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இதற்கு நமது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு எங்களுக்கு வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முதல் வகை நீரிழிவை கையாள்வதில் டைப் 1 ரெஜிஸ்ட்ரி அமைத்து முன்மாதிரியாக செயல்பட்ட மாண்புமிகு மா சுப்பிரமணியம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அவர் மேலும் டைபோன் குழந்தைகளின் மருத்துவச் செலவை அரசாங்கமே ஏற்க வழிவகை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வருங்காலத்தில் இது போன்ற எந்த ஒரு டைப் ஒன் நீரிழிவு குறித்த கருத்தரங்கமாக இருந்தாலும், அதில் இக்குறைபாட்டுடன் வாழும் என்னைப் போன்ற ஒருவரை நிச்சயம் முடிவெடுக்கும் சபையில் உறுப்பினராக்க வேண்டும்.

நிச்சயம் மாண்புமிகு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் வகை நீரிழிவுடன் வாழ்வோர்க்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என முழுமனதோடு நம்புகிறோம்.

இந்த மாநாட்டிற்கு வாய்ப்பளித்த WHS அமைப்பிற்கும் Hriday அமைப்பிற்கும் beyond type 1 அமைப்பிற்கும் தமிழ்நாடு முதல் வகை நீரிழிவு பவுண்டேஷன் அமைப்பிற்கும் கோயமுத்தூர் இதயங்கள் அறக்கட்டளை அமைப்பிற்கும் சென்னை மோகன் நீரிழிவு மருத்துவமனை அவர்களுக்கும் என் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.