11 நாட்கள் நடைபெறும் மலர்கண்காட்சியில் பூங்கா முழுவதும் சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்ள தயாராகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலகப் பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நாளை நடைபெறுகிறது, இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதற்கான ஆயத்தப்பணிகளில் சுற்றுலாத்துறை, மாவட்ட நிர்வாகம்,தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் மே மாதம் பல்வேறு கோடை விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதன் முக்கிய நிகழ்ச்சி ஆன 127 வது மலர்க்கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது. இதில் 10 லட்சகணக்கான மலர்களைக் கொண்டு,அரண்மனை, பட்டத்து யானை உருவம்,போர் வீரர்கள், ராஜா சிம்மாசனம், அன்னப்பறவை வாகனம், உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் மலர்களால் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் நாளை 15 -ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
மேலும் இதில் இ பாஸ் நடைமுறை அமலில் உள்ளதால் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் 6 நாட்கள் நடைபெறுவதாக இருந்த இந்த மலர் கண்காட்சி 11 நாட்களாக நீடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.