• Mon. Jun 5th, 2023

உலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

உலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமாக பங்கேற்று சைக்கிள் ஓட்டினர்……
சர்வதேச வலிப்பு நோய் தினம் ஆண்டுதோறும் மார்ச் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது இந்த நாளில் உலகம் முழுவதும் மூளை வளர்ச்சி பிரச்சனைகள், நரம்பு பிரச்சனைகள் அதனால் ஏற்படும் வலிப்பு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக இன்று சேலம் மாநகர காவல் துறை மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் சரவணகுமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார் மூன்று ரோடு பகுதியில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி திருவாகவுண்டனூர், ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி வழியாக 8 கிலோமீட்டர் கடந்து சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது
இந்த சைக்கிள் பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர் தொடர்ந்து பங்கேற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *