• Tue. Mar 24th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

உலக காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு..,

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்,
கே.புதுக்கோட்டை சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியில் உலக காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் வினாடி- வினா போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.பிரபானந்த் தலைமை வகித்து பேசினார். முன்னாள் கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் டி.டேனியல் முன்னிலை வகித்து பேசினார். ஆசிரியர் குமாரி வரவேற்று பேசினார்.

ஒட்டன்சத்திரம் இந்திய மருத்துவக்கழக செயலாளரும், அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவருமான எ.ஆசைத்தம்பி கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உலக காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு தின கருத்தரங்கம் மற்றும் வினாடி- வினா போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

இதன்பிறகு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவ- மாணவிகள் மத்தியில் காசநோய் தடுப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, தன் சுத்தம் சம்பந்தமான சுகாதாரக்கல்வி போதிக்கப்பட்டது.