• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழா

உலக எய்ட்ஸ் தின விழா கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை அவர்களோடு இருந்து அனைவரும் சமபந்தி உணவு பரிமாறி கொண்டனர். உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கூறுகையில், ஒரு காலத்திலே நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பது சிரமமாக இருந்த காலம் இருந்தது. ஆனால் இன்று எளிய முறையில் சிகிச்சையில் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் 2592 பேர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர் என்று கூறினார்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ராணி என்ற பெண்மணி கூறுகையில், எங்களுக்கு சிகிச்சைகள் தடையில்லாமல் கிடைத்தாலும் எஸ்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுடைய குழந்தைகளுக்கு முழுமையான கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டு இன்னும் வாழ்ந்து வருபவர்கள் எங்களை போன்றவர்களுக்கு இலவச வீடுகளை அரசு வழங்க வேண்டும். கடந்த கொரோனா காலத்தில் நாங்கள் வீடு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டதாகவும் ஊரடங்கு நேரத்திலும் மிகவும் துன்பங்களை அனிவித்ததாகவும் தெரிவித்தனர்.