• Sat. May 4th, 2024

நாகர்கோவிலில் மீனவர்களுக்கு பயிலரங்கம் …

மீன்கள் மற்றும் மீனவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் இரண்டு நாள் பயிலரங்கம் ஜூலை 12.07. 2023 நாகர்கோவிலில் உள்ள கடலோர அமைதி மேம்பாட்டு அலுவலகத்தில் துவங்கியது. ஜூ ‘ஸு அவுட்ரீச்’ அமைப்பு, தெற்காசிய மீனவர் தோழமை அமைப்புடன் இணைந்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் கொச்சியில் உள்ள பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூலம் அவர்களின் டெக் கேம்ப் முன் முயற்சியின் மூலம் பயிலரங்கை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கடலோர அமைதி மட்டும் வளர்ச்சி இயக்குனர் அருட்தந்தை டங்ஸ்டன் அவர்கள் தலைமை தாங்கினார். தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட் பணி சர்ச்சில் அவர்கள் முன்னிலை வகுத்தார். ஸு அவுட்ரீச் அமைப்பின் செயல் இயக்குநர் டாக்டர் சஞ்சய் மோளூர் மற்றும் பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கருத்தரங்கில் விஞ்ஞானிகள், மீனவர்கள், மீனவப் பெண்கள், மீன் வியாபாரம் செய்வோர், மீன் சார்ந்த தொழில் செய்வோர், மீனவ சமூக ஆர்வலர்கள், கடல் ஆராய்ச்சி மாண வர்கள், என பலர் கலந்து கொண்டனர்.

கடல் இன்று சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மீன்களுக்கு கடல் பாதுகாப்பு இல்லை. மீன்கள் வாழும் கடலில் காற்றாலை நிறுவ அரசு முயல்கிறது. அனல்மின் நிலையம், அணுமின் நிலையம் கழிவுகள் கடலுக்குள் கலக்கப்படுகிறது. கடலை உல்லாச சொகுசு கப்பல்கள் நிரப்ப உள்ளது. ஒருபக்கம் அரசுந்திட்டங்களால் கடல் மாசுபடுதபடுகிறது மறுபக்கம் கால சூழல் மாற்றம் கடலின் கன்னித்தன்மை அழிக்க படுகிறது. எனவே, கடலையும் கடல் வாழ் மீன்களை பாதுகாக்கவும், மீனவர்களின் வாழ்வாரம் பாதுகாப்பது பற்றி கருத்தரங்கில் விவாதிக்க பட்டது.


அழிந்து வரும் மீன்களின் தற்போதைய நிலை, மீனவர்களின் தேவைகள் மற்றும் நிலையான மீன்வளத்தைக் கட்டியெழுப்புவதில் மீனவர்களின் முக்கிய பங்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில் இந்தப் பட்டறையில் கவனம் செலுத்த பட்டது. மீனவர்கள், உள்ளூர் அமைப்புகள், உள்ளூர் சமூகங்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான கடலைக் கட்டியெழுப்புவதற்கான முதல் படியாக இந்தப் பட்டறை அமைந்துள்ளது. கடல்கள், மீன்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த மீனவர்களின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொண்டு, இந்த அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கான ஒருங்கிணைந்த தீர்வுகள் விவாதிக்கப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் கற்று கொண்டதை தாங்கள் அமைப்பு, குழுக்கள், சமூகத்திற்கு எடுத்து செல்வதோடு கடலையும் மீன்களையும் பாதுகாக்க பொருப்புள்ளவர்களாக செயல்படுவோம் என தீர்மானிக்கப்பட்டது. கடலில் அனைவரும் சகதோர உணர்வுடன் மீன்பிடி தொழில் செய்வோம் என்பதன் அடையாளமாக கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் ஒருவர் மற்றவருக்கு ராக்கி கட்டி தங்கள் சகோதர அன்பை உறுதி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *