• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாஜக ஒன்றிய செயல்வீரர்களுக்கான பயிலரங்கம்..,

ByK Kaliraj

Nov 14, 2025

2026 தேர்தலை முன்னிட்டு *வெம்பக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு பாஜக ஒன்றிய செயல்வீரர்களுக்கான BLA-2 பயிலரங்கம் , விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டியில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் *வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கான பொறுப்புகள், பணிகள், வாக்காளர் பட்டியல் பராமரிப்பு மற்றும் தேர்தல் நாளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய பொது
சரவண துறை ராஜா,விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர், தலைமை வகித்தார்.
*கோபால்சாமி , பாஜக மாநில துணைத் தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, BLA-2 க்களின் முக்கியத்துவம், கட்சி வலுவூட்டும் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் தேர்தல் சுறுசுறுப்பை வலியுறுத்தினார். மாரிக்கண்ணு சாத்தூர் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர்
முனிஸ்வரன், தொகுதி இணை அமைப்பாளர் வெங்கடேஷ், வெம்பக்கோட்டை மேற்கு பாஜக தலைவர் மாரிச்செல்வம், வெம்பக்கோட்டை கிழக்கு பாஜக ஒன்றிய தலைவர்

பங்கேற்பாளர்கள் பாஜகவின் உறுப்பினர்கள், செயல்வீரர்கள், மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் என ஏராளமானோர் பங்கேற்று, உற்சாகம் மற்றும் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்வதற்கான உறுதியை வெளிப்படுத்தினர்.