நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்க உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மலை சரிவுகளில் ஏரி தேயிலை பறிப்பது என்பதே மிகவும் கடினமானது. இந்த சூளளில் வனவிலங்குகள் தொல்லை ,அட்டைப்பூச்சிகள் தொல்லை என பல்வேறு பிரட்சனைகளுகு மத்தியில் தேயிலை பறித்து வருகின்றோம்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தலையில் குடையை மாட்டிக்கொண்டு தேயிலை பறித்து வருகின்றோம் என டேன்டீ கெங்கரை பகுதியில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்த குடைகள் தற்போது கேரளாவில் கிடைப்பதாகவும் இந்த குடைகள் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என தெரிவித்தனர்.