இந்தியத் தொழிலாளர் பேரவை சார்பாக மாநில துணைச் செயலாளர் பொங்காளி தலைமையில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றம் கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதில் சேலம் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் பேசும்பொழுது, சிமெண்ட் ரூபாய் 60 முதல் 80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கம்பியின் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீடு கட்டும் தொழில் பாதிப்படைந்துள்ளனர். வீடுகளில் வேலை செய்யும் அனைத்து வகையான தொழிலாளர்கள் வேலை இழந்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. எதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைக்கு தீர்வு காணும் வகையில் விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.