மதுரை.சமயநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்துகட்டிடதொழிலாளி பலியானார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வீரய்யா இவரது மகன்காசிராஜன் (வயது 25) கட்டிடத் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை இந்நிலையில் சமயநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் சென்ட்ரிங் வேலை விஷயமாக சென்று விட்டு தேனூர் வழியாக மேலக்காலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தேனூரில் ஒரு திருப்பத்தில் உள்ள அரசு மதுபான கடை எதிரில் இருந்த டிரான்ஸ்பார்மர் இழுவை கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தவறி விழுந்த காசிராஜன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி
