சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிவகாசி மாநகராட்சி மகளிரணி நிர்வாகிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிவகாசி மாநகராட்சி மகளிரணி நிர்வாகிகள் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்களில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்பு மகளிரணி நிர்வாகிகளுக்கு ராஜேந்திரபாலாஜி பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் . பின்பு 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்தும் மகளிரணி நிர்வாகிகளுடன் கே.டி – ராஜேந்திபாலாஜி ஆலோசனை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.



