புதுச்சேரியில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா தலைமையில் கருவடி குப்பம் பாரதி நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து மற்றும் அடுப்புமூட்டி பஜ்ஜி மற்றும் போண்டா சுட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.