மயிலாடுதுறை மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன்,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீரீசெல்வம்,மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வங்கி கடன் உதவிகளையும் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையையும் வழங்கினார்.
அப்போது மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சீனிவாசன்,மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ்,சீர்காழி நகராட்சி தலைவர் துர்கா பரமேஸ்வரி,தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி,உதவி திட்ட அலுவலர் மனுநீதிசோழன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.