• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பெண்களுடைய கல்விதான் முக்கியம்-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு..

Byகுமார்

Aug 22, 2024

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சியை வழி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பள்ளி விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசி உள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் திருக்குடும்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 39 ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..,

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் கூடுதல் மகிழ்ச்சி எனக்கு. ஏனென்றால் இந்த பள்ளி என் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. அது மட்டும் இல்லை. இந்த பள்ளியை இயக்கும் குழுவினர் கிறிஸ்டியன் மிஷினரி என்று கூறும் சமுதாய மறை பணியாளர்கள் இவர்கள் பல பத்தாண்டுகளாக மதுரையில் பணி செய்து வரும்போது என் அப்பா, என் தாத்தா உட்பட்ட என் குடும்பத்தினருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்து அவர்களோடு பணிக்கெல்லாம் எங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ செய்து வரலாறு இருக்கிறது என்பதால் கூடுதல் பெருமை பெறுகிறேன் .

இத்தகைய நிகழ்ச்சிகளில் முக்கியமான கருத்து எங்கள் திராவிட இயக்கத்தோடு கருத்து கண்ணுக்கு முன் தெரியும் வகையில் வெளிப்படையாகிறது ஒரு சமுதாயத்தை உயர்த்தி மக்கள் வாழ்க்கை முறையை உயர்த்த வேண்டும் என்றால் அதில் பெரிய பங்கு பெண்களுடைய கல்விதான். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சியை வழிநடத்தி வருகிறார் முதல்வர் மு க ஸ்டாலின் .

அந்த அடிப்படை தத்துவத்தின் பணி செய்யும் எங்கள் அனைவருக்கும் இத்தகைய நிறுவனங்கள் மிகவும் முக்கியமாகவும் அதில் பிரியப்பட்டு உள்ளவர்களாகவும் நாங்கள் இருக்கிறோம் .

இந்த பள்ளியில் பிரைமரி அதாவது ஆரம்ப கல்லூரி ஆரம்பப்பள்ளி மாணவி எண்ணிக்கை 560 க்கு மேலும் செகண்டரி ஹையர் செகண்டரி 1560 மேலும் இருக்கிறது பாராட்டத்தக்கது நம் மதுரை சமுதாயத்திற்கும் குறிப்பாக இந்த தொகுதி குடும்பங்களுக்கும் மிகவும் உதவும் வகையில் இந்த செயல்பாடு இருக்கிறது அதற்கு என் நன்றியையும் என் பாராட்டையும் அனைத்து குழுவினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூறாண்டுகளாக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு குறிப்பாக, பெண்களுக்கு சம கல்வி, சம உரிமை, வேலை வாய்ப்பு என்ற இலக்குகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிற சூழ்நிலையில் இன்றைக்கு தமிழ்நாடு மிகச்சிறந்த ஒரு அடுக்கில் உலகிலேயே இருக்கிறது .

இளைஞர்கள் கல்லூரி சேரும் சதவிகிதம் என்று கூறப்படும் சதவீதம் இந்தியா சராசரி ஓட சுமார் இரண்டு மடங்கு அதிகமாக இருந்து கிட்டத்தட்ட 50 சதவீதம் பக்கத்தில் இருக்கின்றன அதேபோல் கூறுவோம் இன்றைக்கு தொழில்துறையில் மேனுஃபேக்சரிங் துறையில் பணி செய்து வரும் பெண்கள் இந்தியா முழுக்க பணி செய்து வரும் பெண்களில் 42% தமிழ்நாட்டில் மட்டும் இருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைக்குரியது.

ஏனென்றால் நம்ம மக்கள் தொகை வெறும் 6 சதவீதம் மக்கள் தொகை இருக்கிற மாநிலத்தில் 42 சதவீதம இருக்கிறார்கள் என்றால் அது சமுதாயத்துக்கு ஒரு அடையாளம் பெருமை இந்த நூறாண்டு பயணத்தில் குறிப்பாக மதுரை திருநெல்வேலி கன்னியாகுமரி, திருச்சி இந்த இந்த மாவட்டங்களில் இந்த கிறிஸ்டியன் மிஷனரி பங்களிப்பை நமது குறைக்கவே முடியாது பாராட்டுவதற்கு எல்லையே இல்லை இந்த மதுரையில் பார்த்தீர்கள் என்றால் இன்றைக்கு பெண்கள் கல்லூரிகள் முக்கியமான கல்லூரிகளில் சிறப்பான இடம் பெற்றவை பாத்திமா கல்லூரி லேடி டோக் கல்லூரி இதெல்லாம் நம் சமுதாயத்துக்கு பல பத்தாண்டுகளாக ஒரு முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருந்திருக்கிறார்கள்

கல்வியோட முக்கியத்துவம் வேறு காலத்தில் வெவ்வேற வகையில் உணரப்பட்டு பழக்கத்தில் செயல்பாட்டில் வேறுபட்டு இருக்கிறது. உண்மையில் கூற வேண்டும் என்றால் நீதிக் கட்சி ஆட்சி வருவதற்கு முன் அனைவருக்கும் கல்வி என்ற அரசியல் தத்துவம் இந்த நாட்டிலேயே இல்லை குறிப்பாக சில சமுதாயங்கள் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறி அவர்கள் மட்டுமே கல்வி பெரும் சூழ்நிலை பல நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருந்தத ஆரம்பக் கல்வி ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ற சட்டத்தை 1921 சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்கள் .

சமுதாயத்துக்கு நல்ல பொருளாதார விளைவை கொடுக்கறதுக்கு வாய்ப்பு இருக்கும் என்றாலும், கல்வியோட அடிப்படை தத்துவம் இலக்கு நல்ல மனிதர்களை நல்ல மாணவர், மாணவிகளை உருவாக்குவது வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டிருப்பதற்கு தன்மையை கொடுப்பது உருவாக்குவது, அது இல்லாமல் வெறும் நூலில் இருந்து வர்ற அறிவை மட்டும் இல்லாமல் உடற்பயிற்சி கலை கலாச்சாரம் பண்பாடு. இதில் எல்லாம் என் ஜனநாயக விதிமுறைகள் சிவிக்ஸ் என்ற சப்ஜெக்ட் எல்லாம் நல்ல பயிற்சி பெற்றால் வாழ்நாள் முழுவதும் அது உதவியாகவும் அடையாளமாகவும் இருக்கும் என்று கருதுவேன் பல இடங்களில் அதனை பற்றி கற்றுக் கொடுக்கிற பழக்கமும் விதிமுறைகளும் முழுசாக மறைந்து விட்டன

அத்தகைய சூழ்நிலையில் இன்றைக்கு நான் இங்கே வந்த போது அந்த பேண்ட் அவங்க ஸ்கூல் பேண்ட் ஆரம்பித்து எத்தனையோ வகையில் கலையிலும் பண்பாட்டிலும் இங்கே அந்த ஹுயூமானிட்டி பார்த்து நான் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது அந்த பெர்ஃபார்மன்ஸில் ஈடுபட்டவர் அனைவர்களுக்கும் என் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் இப்பவே கலைகள் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை தொடர்ந்து மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.