அரசு பேருந்தில்7 பவுன் நகை திருடிய பெண்கள் குழந்தைகளுடன் கைது செய்த
பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தார்.
கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி மரகதம். இவர் உறவினரின் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கரூரிலிருந்து கோவை செல்லும் அரசு பேருந்தில் தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். பேருந்தில் ஓட்டுனரின் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்துள்ளார். மேலும் திருமண நிகழ்ச்சியில் அணிவதற்காக தனது கைப்பையில்7 பவுன் நகையை கொண்டு சென்றுள்ளார். அப்போது அரசு பேருந்து பல்லடம் அருகே வந்த போது மாதப்பூரில் தேனீர் கடையில் பேருந்து நின்றுள்ளது. கடையில் தேனீர் அருந்திவிட்டு பணம் கொடுக்க கைப்பையை பார்த்தபோது, கைப்பையில் இருந்த 7 பவன் நகையை காணவில்லை. இது குறித்து மரகதம் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தொடர்ந்து புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயதேவி திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக குழந்தைகளுடன் வந்த இரண்டு பெண்களை நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாந்தம்மா(40), சுதா(37) என்பது தெரிய வந்தது. மேலும் மரகதத்திடம் நகையை திருடியதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர்.








