திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அமைந்துள்ள சென்னிமலை பாளையம் கணபதி நகர் பகுதியில் வசித்து வரும் சுரேஷ்குமார் என்பவர் ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் இன்று பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு சென்றபோது அவரது வீட்டின் வளாகத்திற்குள் கையில் பைகளுடன் புகுந்த ஐந்து பெண்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்களை பைகளில் போட்டு திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டிற்கு திரும்பிய பின் சில பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் ஐந்து பெண்கள் இரும்பு பொருட்களை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இரண்டாவது முறையாக இதுபோன்று பெண்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.