புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களமாவூரில் நடுபட்டி நீர்பழனி கோங்குபட்டி ஆகிய பகுயில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது.

இன்று காலை 9-மணிக்கு துவங்கபட்ட இம் முகாமில் 15-அரசு துறை அதிகாரிகள் பங்குபெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு உடனடி தீர்வாக 80 – மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டனர்.
அப்போது நீர்பழனி காரபட்டை சேர்ந்த வள்ளிகன்னு என்பவர் ஆவணி மாதம் நடைபெரும் தனது மகன் மணிகண்டன் திருமணத்திற்கு தேவையான முதல் திருமண சான்றிதழ் பிறப்பிட சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் வாங்குவதற்கான விண்னப்ப மனுவை அதிகாரிகளிடம் கொடுத்தார். அப்போது மனுவை பரிந்துரை செய்த அதிகாரிகள் உடனடி தீர்வு காணப்பட்டு மூன்று சான்றிதழ்களையும் உடனடியாக வழங்கினார்கள்.
ஒரே இடத்தில் ஒரே நாளில் மூன்று சான்றிதழ்களை வாங்கிய அந்த பெண்மணி தமிழக முதல்வருக்கு சிரித்தபடி மனமகிழ்ச்சியல் நன்றி தெரிவித்தார்.
இன் நிகழ்வில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பு கண்கானிப்பாளர் V. தெய்வநாயகி குளத்தூர் வட்டாச்சியர் சோனை கருப்பையா வட்டார வளர்ச்சி அலுவளர் வள்ளியம்மை ஆகியோர் தீவிர கண்கானிப்பில் இம்முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமில் பொது மக்களை சந்தித்த விரலிமலை கிழக்கு திமுக ஒன்றிய செயளாலர் முபிம.சத்யசீலன் முன்னாள் திமுக சேர்மன் முபி.மணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவா கலை இலக்கிய அணி அமைப்பாளர் செல்லையா விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் Ak. கண்னன் தொண்டரணி துணை அமைப்பாளர் சீராளன் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மகேந்திரன் பாண்டியன் விஜயகாந்த் வர்த்தக அணி துணை அமைப்பாளர் PV.சண்முகநதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முத்தழகன் மற்றும் அனைத்து திமுகவினரும் கலந்து கொண்டனர்.








