• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே 100 நாள் வேலை கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை சூழ்ந்த பெண்கள்

ByKalamegam Viswanathan

Apr 27, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ வை தங்கள் பகுதியில் நூறு நாள் வேலை திட்டம் முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி மற்றும் அதிமுகவினரை சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த ஆர் பி உதயகுமார் ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணியிடம் முறையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்துமாறு. கூறினார் 100 நாள் வேலை பார்க்கும் பெண்களை கட்சியினர் என்று கூறி கூட்டத்திற்கு அழைத்து வந்ததால் 100 நாள் வேலை வழங்குமாறு கேட்டதாக வந்திருந்த.பெண்கள் கூறினார்…