• Mon. Jul 1st, 2024

பூதிப்புரம் பேரூராட்சியில் டாஸ்மாக் மதுகடை மற்றும் பார் இரண்டும் மூடக்கோரி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்

ByJeisriRam

Jun 28, 2024

ஆரம்ப சுகாதார நிலையம் வந்த கர்ப்பிணி பெண் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் மதுரை உயர்நீதிமன்ற கிளை 8 வாரங்களில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டும் இதுவரை டாஸ்மாக் கடையை மூடவில்லை என பெண்கள் குற்றம் சாட்டினர்.

தேனி மாவட்டம், போடி தாலுகா, பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை எண் 8612 செயல்பட்டு வரக்கூடிய மதுபான கடை, பார் இரண்டும் மூடக்கோரி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தேனி – பூதிபுரம் சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.இந் த மதுபான கடை அருகே ஆரம்ப சுகாதார நிலையம், குடியிருப்புகள், கோவில், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் தொழில் சாலை, உள்ளிட்டவைகள் இருக்கிறது.

அரசு மதுபான கடை மற்றும் பார் செயல்படுவதால் குடிமகன்கள் குடித்து விட்டு பாட்டில்களை நடுரோட்டில் உடைத்து விடுவதோடு, சாலையில் வாகனங்களை மறித்து நிறுத்தி விடுகின்றனர்.

இதனால் அவசர காலத்திற்கு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு அவசர காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல முடியாமல், 2 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர்.

ஆரம்ப சுகாதாரத்துக்கு வந்த கர்ப்பிணி பெண் மீது மது பாட்டில் வீசப்பட்டதால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய மது கடையை எட்டு வாரங்களில் மூடவேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் தொடர்ந்து அரசு மதுபான கடை, பார் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த மது கடை, பார் மூட வேண்டும் என மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

உடனடியாக மதுக்கடையை மூட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின்னர் பெண்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *