• Sat. Mar 25th, 2023

இளைஞர் தற்கொலை முயற்சி தடுத்து நிறுத்திய பெண் காவலர்

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபரை பெண் காவல் தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஆண்டனி ஜேக்கப் சிங்க் என்பவர் தனது தம்பி புருஷோத்தமன் தன்னையும் தன் அம்மாவையும் கொடுமைப்படுத்துகிறார் எனவும் அவன் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் உள்ளே இருந்து விட்டு வெளியே வந்ததாகவும் தற்போது பல ரவுடிகளை தன் வீட்டிற்கு அழைத்து வருவதாகவும் அதை தட்டிக் கேட்ட என்னையும் என் தாயையும் அடித்து துன்புறுத்துவதாகவும் இதுகுறித்து பலமுறை ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிப்பதற்கு முயன்றார் அதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஜிஜினி என்பவர் உடனடியாக காப்பாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *