கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தை பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராமசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்பனை செய்வதாக கூறி, இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காளிகோனார் என்பவரின் வாரிசுதாரர்கள் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது ஒரு வாரிசுதார பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்களின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து, பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்.., அந்த புகார்தாரர்கள் அபாண்டமாக பொய் கூறுவதாகவும், இது குறித்து அவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்த போதே எங்களது பெயரை கெடுக்க பார்க்கிறார்கள் என காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், இது சம்பந்தமாக போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.
எனக்கும் அந்த இடத்திற்குன் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய அவர் அந்த இடம் எங்குள்ளது என்று கூட தெரியாது அந்த மனுவை பார்த்து தான் கீரணத்தம் பகுதியில் அந்த இடம் இருப்பது தெரியவந்ததாக தெரிவித்தார். மேலும் அந்த ஸ்ரீவாரி ப்ரமோட்டர்ஸ் அலுவலகத்திற்கு ஒரு நாள் சென்றதாக அதுவும் இது சம்பந்தமாக பேசவில்லை என்றார்.
இந்த குற்றச்சாட்டு அரசியல் பின்புலமாகவோ அல்லது தொழில் போட்டியாகவோ இருக்கலாம் என்றார்.
மேலும் அவர்கள் பாலாஜி உத்தம ராமசாமி என்று கூறி உத்தமரா என்று எனது தந்தையின் பெயரை குறிப்பிட்டு, அவமதிக்கும் விதத்தில் கேட்பதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் 30 காலத்தில் இதுவரை எந்த வழக்கும் இல்லை என தெரிவித்த அவர்கள் அவர் கூறுகின்ற வருடத்தில் எனக்கு 12 வயது தான் அதிமுக எம்எல்ஏவுக்கு 10 வயது தான் இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் அவர்களுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசுவதற்கும் தயார் என கூறினார்.
30 வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் தன் மீது எந்த ஒரு பிளாக் மார்க்கமும் இல்லை என தெரிவித்த அவர் பொய்யான குற்றச்சாட்டை அவர்கள் முன்வைப்பதாக தெரிவித்தார்.
தானும் அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் பார்ட்னர்கள் என தெரிவிக்கவும் இருவரும் சேர்ந்து தொழில் செய்து 7 ஆண்டுகள் ஆகிறது என தெரிவித்தார்.