• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்
இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்
இருந்தபோதிலும் காமடிக்காக என்பதை காட்டிலும் கதைக்கு வலுசேர்க்கும் வகையில் யோகிபாபுவின் கதாபாத்திரத்தை மாரிசெல்வராஜ் வடிவமைத்திருப்பார். மேற்கு மாவட்ட அரசியல் பற்றி போகும்மாமன்னன் படத்தில் வடிவேலு நடிக்கிறார் என அறிவிக்கப்பட்ட போது தமிழ் சினிமா அதிர்ந்து போனது என்று தான் கூற வேண்டும். காமடி நடிகராக மட்டுமே தமிழக மக்களின் தினசரி வாழ்க்கையில் ஏதாவது ஒரு இடத்தில் வடிவேலு திரைப்படங்களில் பேசிய வாழ்வியல் வசனங்கள் வந்துவிடும். அப்படிப்பட்ட காமெடி அமுதசுரபி கலைஞன் வடிவேல் அரசியல் படத்திலா என்கிற ஆச்சர்யத்திற்கு மாமன்னன் படத்தின் முதல் பார்வை போஸ்டரில் இயக்குனர் மாரிசெல்வராஜ் வடிவேல் தோற்றம் மூலம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தார். படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் என்றாலும் கதையின் நாயகனாக வடிவேல் இருப்பார் என்பதை அவரது தோற்றம் வெளிப்படுத்தியது. அத்துடன் படத்தில் அவர் பாடிய பாடல் இன்றைக்கு அனைவராலும் விரும்பி கேட்கப்படும் பாடலாக மாறியுள்ளது.வடிவேல் காமெடி நடிகர் மட்டும் இல்லை பன்முக கலைஞன் என்பதை மாமன்னன் படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் என்பதை படத்திற்கான விளம்பர புகைப்படங்கள் உணர்த்துகிறது அதனை நேற்றையதினம் சென்னையில் நடைபெற்ற மாமன்னன் படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழாவில் வடிவேலு பேசியது உணர்த்தியது

தேவர் மகன் படத்துக்குப் பிறகு எனக்கு அமைந்த முக்கியமான படம் இது” என ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகர் வடிவேலு பேசினார்
“நான் எங்கும் செல்லவில்லை. எல்லா நேரமும் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்ஃபோனில் வந்துகொண்டுதான் இருக்கிறேன். எனக்கு கேப்-பே கிடையாது. என்னுடைய அன்பு தம்பிகள் மீம் கிரியேட்டர்ஸ்களால் நான் வந்துகொண்டுதான் இருக்கிறேன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி தயாரிப்பில் உங்கள் வீட்டு பிள்ளை நான் இப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் எல்லோரின் வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகும் கதை. அருமையான கதையை உதயநிதி தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறேன். நான் பாடவில்லை, அவர் தான் என்னை பாட வைத்துள்ளார்.
மறைந்த என் தாயை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். அருமையான கதைக்களம். படம் வெற்றி பெறும். ‘தேவர் மகன்’ படத்துக்குப் பிறகு எனக்கு மிகப் பெரிய படம் இது. அரசியல் படம் இது. புதுமையான படம் இது. சிறந்த குணச்சித்திர கதாபாத்திரம் எனக்கு இதில் அமைந்துள்ளது. சுயமரியாதை கலந்த கதாபாத்திரம். இது உதயநிதியின் கடைசி படம் என சொல்ல முடியாது. இவ்வளவு நாள் கதாநாயகனாகநடித்தார். தற்போது அரசியலில் ஹீரோவாகப் போகிறார். மக்கள் பணியை செய்யப் போகிறார்” என்றார்.