• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா..?

Byகாயத்ரி

May 23, 2022

இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அந்தத் திட்டத்தின் மூலமாக எந்தவித பணம் பலன்களையும் ஓய்வு காலத்திற்கு பிறகு ஊழியர்கள் பெற முடியாது. இதனை அனைத்து மாநில அரசு ஊழியர்களும் எதிர்த்தனர். இதனை ரத்து செய்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இது தொடர்பாக அரசு எந்த ஒரு பரிசீலனைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த நேரத்தில் கடந்த வருடம் ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக தலைமையிலான அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தும் என வாக்குறுதிகளை அளித்தது.

அதாவது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவது, சம்பள உயர்வு வழங்கப்படும் என தெரிவித்தது. அதனை நிறைவேற்றும் விதமாக ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனைப் போலவே பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று தோகைமலை யூனியன் அலுவலகம் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் தமிழக அரசு விரைவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.