• Fri. Apr 26th, 2024

கால்வாயில் விழும் கால்நடைகள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்?

ByKalamegam Viswanathan

Feb 25, 2023

தொடர்ந்து கால்வாயில் விழும் கால்நடைகள் அடுத்து மனிதர்கள் விழும் முன் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வது வார்டு. பைபாஸ் ரோடு நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பிரதான சாலை குறுக்கே கோரவாய்க்கால் சொல்கிறது.பிரதான பைபாஸ் சாலை இந்த வாய்க்காலானது எந்தவித தடுப்பு அறனும் இல்லாமல் திறந்தவெளியில் சுமார் 10 அடி ஆழத்திற்கு நீர் செல்லாமலும் துர்நாற்றம் வீசுகிறது.

இதில் அடிக்கடி கால்நடைகள் விழுவதும் பொதுமக்கள் அதை மீட்பதுமாக தொடர்கிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நடந்து வருபவர்கள் மற்றும் முதியவர்கள் இந்த வாய்க்கால் இருப்பது தெரியவில்லை.இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித தடுப்பு அமைப்புகளும் ஏற்படுத்தாமல் தொடர்ந்து கால்நடைகள் அதில் விழுவது தொடர்கதையாகவே உள்ளது.மேலும் மனிதர்கள் யாரும் இதில் விழுந்து உயிர் பலி ஆகும் முன் உரிய தடுப்பு வேலைகள் அமைத்து பொதுமக்கள் உயிர் காக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *