குமரி பகவதியம்மன் கோவில் விழாவுக்கு யானை வருமா.?வராதா.? பக்தர்களின் தொடர் போராட்டம்.
குமரி மாவட்டம் சுதந்திர இந்தியாவில் கேரள மாநிலத்தின் பகுதியாக இருந்தது. கேரளாவில் கோவில் விழாக்களில் யானைக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. குறிப்பாக குருவாயூரப்பன் மற்றும் திருச்சூர் பூரம் விழாக்களில் யான பெரும் எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுவது இன்றும் தொடர்கிறது.
திருச்சூர் பூரத்தில் (விழாவில்) நூற்றுக்கும் அதிகமான யானைகளின் வரிசை உலகப் பதிவு ‘கின்னஸ்’ (would Regards) புத்தகத்தில் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அரசர் காலம் முதல் மக்கள் ஆட்சி மலர்ந்த பின்னும் அண்மை காலம் வரை நவராத்திரி திருவிழா நடைபெறும் காலங்களில் தேரோட்டத்தின் போதெல்லாம் யானையை பயன்படுத்தி வந்தது வாடிக்கை. நவராத்திரி விழாவின் பத்து நாட்களும் பகவதி அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்கான புனித நீர், கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள சர்க்கரை குளம் அருகே உள்ள கிணற்றில் இருந்து புனித நீர் எடுத்து கோயில் தந்திரி யானை மீது அமர்ந்து வந்தது வெகு காலமாக பின்பற்ற பட்ட நிகழ்விற்கு அண்மை காலத்தில் வனத்துறை கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் கோவில் விழாக்களில் யானையை பயன்படுத்த தடை வந்தது. அன்று முதலே கன்னியாகுமரியில் நவராத்திரி விழாவிற்கும், பகவதியம்மன் கோவில் தேரோட்டத்திற்கும் யானை வரவேண்டும் என்ற கோரிக்கை ஒலித்தது,விழா நிறைவடைந்ததும் முற்று பெற்றுவிடும்.

இந்த ஆண்டு நவராத்திரி விழாவிற்கு யானை வருமா,வராதா என்ற கோசம் சற்றே வலிமையாக ஒலிக்கத் தொடங்கிய போதே நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆகியோர் தேவியின் பரிவேட்டையின் போது(அக்டோபர்_12) சங்கரன் கோவில் யானையை அனுமதிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் போச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். யானை வரும் என்பதை தெரிவித்தனர்.
கடந்த இரண்டு தினங்களாக இரவு கோவில் நடை சாத்திய பின் அடைக்கப்பட்ட கோவில் கதவின் முன் இருந்து நள்ளிரவு வரை நடைபெற்ற போராட்டத்திற்கு.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் கண்டன குரல் போராட்டம் நடத்திய நிலையில். காவல்துறை , தேவஸ்தான அதிகாரிகள் பரிவேட்டைக்கு அம்மன் எழுந்தருள்வதற்கு நிச்சயமாக யானை வரும் என்ற வாய் மொழி உறுதியை அடுத்து போராட்டத்தை கை விட்டனர்.

கடந்த முன் இரவு நேரத்தில் (அக்டோபர்_11) இரவு சங்கரன் கோவிலில் இருந்து யானையை கொண்டு வர அனுமதி கிடைக்கவில்லை என்ற செய்தி பரவிய நிலையில், பக்தர்கள் கூடி மரத்தால் செய்யப்பட்ட யானைக்கு நெற்றி பட்டம் இட்டு கன்னியாகுமரி தேரோடும் வீதியில் தொடங்கி பகவதி அம்மன் கோயில் வரை ஊர்வலமாக எடுத்துச் சென்று போராட்டக்காரர்கள் அவர்களின் எதிர்ப்பை பரவ செய்தது மக்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான பரபரப்பை பற்ற வைத்தது. இந்த நிகழ்வில் கன்னியாகுமரி அருள் மிகு முத்தாரம்மன் கோவில் நிர்வாகியும் ஊர் தலைவருமான கிருஷ்ணபிள்ளை, கண்ணன் மற்றும் சமுதாய பிரமுகர்கள்,இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றார்கள்.
இன்று பிற்பகல் அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளி மகாதானபுரம் வரை செல்லும் ஊர்வலம் (3_ கிலோமீட்டர்) புறப்படும் நேரத்தில் ஒரு பரபரப்பான சூழல் எழும் என்ற நிலையை உருவாகியுள்ளது.