• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறுமா..?

Byவிஷா

Sep 6, 2023

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள், தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், தங்களின் கோரிக்கை நிறைவேறுமா? என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடந்த 2012 ஆம் வருடம் தமிழக அரசு பள்ளிகளில் இசை, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் நியமனம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆன நிலையில், தற்போது வரை பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
மேலும் தங்களுடைய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். திமுக அரசு தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. இதனை தற்போது வரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்களா என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர்.