• Thu. Feb 13th, 2025

தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!

Byவிஷா

Sep 5, 2023

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை தொடரும் என்றும், கடலோர பகுதிகளில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 8ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.