• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சசிகலா போலவே ஓ.பன்னீர்ச்செல்வம் ஓரம் கட்டப்படுவரா?-ஜெயக்குமார் பேட்டி

ByA.Tamilselvan

Jun 20, 2022

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க கூட்டத்தில் நடந்த விஷயத்தை நான் வெளிப்படையாக பேசியதாக சொல்கிறார்கள். நான் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை,கூட்டத்தில் நடந்த விவாதத்தை வெளிப்படையாக சொல்ல வில்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்று மட்டுமே சொன்னேன். யார் ஒற்றை தலைமை என எதுவும் கூறவில்லை. ஒற்றை தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள் மற்றும் மாட்ட நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. ஒற்றை தலைமை குறித்து பேசியதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அ.தி.மு.க.வுக்கு அதிகபட்ச அதிகாரம் பொதுக்குழு தான்.பொதுக்குழு தான் அனைத்து அதிகாரமும் படைத்தது. அதில் தான் விதிகளை கொண்டு வரலாம். விதிகளை மாற்றலாம். ஒற்றை தலைமை குறித்து பொதுக்குழுவில் சுமூக முடிவு எட்டப்படும். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் எதுவும் இல்லை. சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. அவரை போலவே ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நடக்கும் என்று கூறுவது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.