சையாரா படத்தின் தலைப்பு பாடலின் பெரும் வெற்றிக்குப் பிறகு, யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரி, ஜூபின் நௌடியல் பாடியுள்ள ‘பர்பாத்’ பாடலை வெளியிட்டுள்ளனர் .தி ரிஷ் இந்த பாடல் வரிகளை எழுதி ,இசையமைத்துள்ளார் .
சையாரா பட டீசர் வெளியானதிலிருந்து, அற்புதமான நடிப்புத் திறன்களை காட்டிய அறிமுகக் கலைஞர்களுடன் ஒரு காதல் கதையை உருவாக்கியதற்காக யஷ் ராஜ் மற்றும் மோஹித் கூட்டணி ஒரு மனதாகப் பாராட்டைப் பெற்றுள்ளது.

பர்பாத் பாடலுக்காக ஆத்மார்த்தமான காதல் பாடலை பாடி அதிக வரவேற்பு பெற்ற இந்த தலைமுறையை சார்ந்த ஜூபின் நௌடியலை பாட வைத்துள்ளார் மோஹித்.
இது குறித்து மோஹித் கூறுகையில்,
காதலுக்காக இந்த தலைமுறையின் குரலாக உள்ள பாடகர்கள் பல பேர் உள்ளார்கள், ஜூபின் நௌடியல் நிச்சயமாக இந்த பட்டியலில் உள்ளார் .சையாராவின் இசை ஆல்பத்தில் ஜூபின் ஒரு ஆத்மார்த்தமான காதல் பாடலைப் பாட வேண்டும் என்பதில் நான் ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தேன். பர்பாத் பாடலுக்கு , ஜூபின் குரல் சரியான பொருத்தமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.
ஜூபினுக்கு மிகவும் தனித்துவமான குரல் உள்ளது.இந்த காதல் பாடல் அதிக உணர்வையும், அதிக தாக்கத்தையும் ஏற்படுத்தும். எந்தவொரு பாடகருக்கும் அது ஒரு அரிய குணம், அதனால் தான் அத்தகைய பாடகர்கள் மிகப்பெரிய நட்சத்திரங்களாக மாறுகிறார்கள். மக்கள் இணைக்கக்கூடிய, அடையாளம் காணக்கூடிய ஒரு காதல் பாடலை ஒரு பாடகர் வழங்க முடிந்தால், அத்தகைய திறமையைக் கொண்டிருப்பது உண்மையிலேயே அவருக்கு கிடைத்த பரிசு தான் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.