• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எய்ம்ஸ் மருத்துவமனை பெயர் மாற்றப்படுமா..??

Byகாயத்ரி

Sep 17, 2022

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரை மாற்ற முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் இதற்கு மருத்துவ பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய பெயர் வைக்க மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் மருத்துவ ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சருக்கு மருத்துவ பேராசிரியர்கள் சங்கம் கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபலமான நிறுவனங்கள் பல நூற்றாண்டுகளாகவே ஒரே பெற்றுக்கொண்டு தான் இயங்கி வருகின்றன என்றும் அதே போல் பல ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனையை என்ற பெயரில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு புதிய பெயர் வைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் புதிய பெயர் வைத்தால் எய்ம்ஸ் என்ற அடையாளத்தை இழக்க நேரிடும் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை பெயரை மாற்றுவதற்கான எந்த ஒரு திட்டத்தையும் தயவுசெய்து பரிசீலனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் மருத்துவ பேராசிரியர்கள் சங்கம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.