• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் சாலை ஓரம் குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் கழிவுகளால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன வனப்பகுதிகள் சூழ்ந்தும் விவசாய நிலங்கள் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்தும் காணப்படுகின்றன.
கேரளாவில் இருந்து அதிக அளவில் வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் மஞ்சூர் சுற்றியுள்ள அழகிய பகுதிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
அரசுத் துறையைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா பயணிகள் என வனப்பகுதி வழியாக கிண்ணக்கெரை அப்பர் பவானி போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பொழுது தாங்கள் எடுத்து வந்துள்ள உணவுப் பொருட்களை சாலை ஓரமாக வாகனங்களை நிறுத்தி விட்டு உணவருதுகின்றனர்..

மீதமாகும் உணவுகளை பாலீத்தின் பைகளோடு சாலையோரங்கள் வனப் பகுதிகளில் கொட்டி விட்டு செல்கின்றனர். அப்பகுதி வழியாக வரும் வன விலங்குகள் யானை குரங்கு கரடி,காட்டுப்பன்றி,மான்,முயல்,காட்டுக்கோழி,காட்டெருமை,போன்ற வன விலங்குகள் உணவுகளை பாலீத்தின் பைகளோடு தின்று விடுகிறது.ருசி கண்ட வனவிலங்குகள் கிராமப்புறங்களில் மெல்ல மெல்ல படையெடுத்து குப்பை தொட்டிகள், சாலை ஓரங்கள் தெருக்களில் கிடக்கும் உணவுப் பொருட்களையும் அச்சத்தோடு தின்று வந்தது
தற்போது பொது வீடுகளை உடைத்தும் சத்துணவு கூட்டங்களில் உள்ள பொருட்களையும் சூறையாடி தின்று வருகின்றன. பொதுமக்கள் தற்போது மீதமாகும் உணவுப் பொருட்களை அரிசி சாதம் பழங்கள் இறைச்சி கழிவுகள் சாலை ஓரம் குப்பை குளங்களில் கொட்டப்பட்டு வருவதால் வனவிலங்குகள் வீடுகளில் வளர்த்து வரும் ஆடு மாடு போன்றவற்றை அளவுக்கு அதிகமான அரிசிகள் சாதங்களை உண்டு இறந்து வருகின்றன கழிவுகளால் நோய் பரவும் அபாயங்களும் உள்ளன.வீடுகள் கடைகளில் வீணாகும் உணவுப் பொருட்களை சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.