• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

புள்ளிமான்களின் அவல நிலை… வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை

Byகாயத்ரி

Feb 9, 2022

வனவிலங்குகளை காப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை.ஆனால் மனிதனே விலங்குகளுக்கு ஆபத்தானால் நிலை என்ன? அக்கொடுமையான நிலையை தான் தற்போது புள்ளிமான்கள் அனுபவிக்கின்றன…

சென்னை ஐ.ஐ.டி வளாகம் அடர்வனப்பகுதி என்பதனால் அங்கு பெரும்பாலான புள்ளிமான் உட்பட பல வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வளாகத்தில் தெருநாய்கடி, பிளாஸ்டிக் கழிவு உட்கொள்ளுதல் போன்ற பிரச்சனைகளால் மான்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஐ.ஐ.டி வளாகத்தில் 188 நாய்கள் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இதில் 50 நாய்கள் உயிரிழந்துவிட்டதாகவும், 41 நாய்கள் தத்தெடுக்கப்பட்டு தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் இருப்பதாகவும் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையில் மீதமுள்ள 22 நாய்கள் இன்னும் ஐ.ஐ.டி வளாகத்தில் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில் கடந்த 2021 ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையிலான 6 மாத கால கட்டத்தில் 31 புள்ளிமான்கள், 4 கலைமான்கள் உயிரிழந்துள்ளது. இவற்றில் 14 மான்களுக்கு மட்டுமே உடற்கூராய்வு செய்யப்பட்டு உள்ளது. அப்போது பிளாஸ்டிக் உட்கொண்டதால் 4 மான்கள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளது. இதற்கிடையில் நாய் கடித்ததில் 2 , காசநோய் மற்றும் உடல் நலக்குறைவால் 8 மான்கள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர். அதே சமயத்தில் உயிரிழந்துள்ள அனைத்து மான்களுக்கும் ஏன் உடற்கூராய்வு செய்யவில்லை..?, உணவுக்காக மான்கள் வேட்டையாடப்படுகின்றனவா..? என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.