நீலகிரி மாவட்டம் மஞ்சூர், கெத்தை சாலையில் அரசு பேருந்து வழிமறித்து கூட்டமாக நின்ற காட்டு யானைகள்… மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.இந்நிலையில் கடந்த சில நாட்களாக உதகையில் இருந்து கோவைக்கு செல்லும் மூன்றாவது மாற்றுப் பாதையான உள்ள மஞ்சூர், கெத்தை சாலையில் காட்டு யானைகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.இந்நிலையில் நேற்று இரவு மஞ்சூரில் இருந்து கோவைக்கு செல்லும் அரசு பேருந்து கெத்தைப் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் வழி மறித்து நின்றது.
இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காட்டு யானைகளின் கூட்டம் ஒவ்வொன்றாக வனப்பகுதிக்குள் சென்றதை தொடர்ந்து பேருந்து அங்கிருந்து சென்றது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.